Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ. 369 கோடியாக உயர்வு

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி செப்டம்பர் காலாண்டு முடிவில் நிகர லாபமாக ரூ. 369.30 கோடியை ஈட்டியுள்ளது.


நடப்பு 2015-16 நிதி ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2வது காலாண்டில், இந்தியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.2,98,003 கோடியாக அதிகரித்துள்ளது. 

வங்கியின் நிகர லாபம் 17.5 சதவீதம் உயர்ந்து ரூ.369.30 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வங்கியின் நிகர லாபம் ரூ. 314.33 கோடியாக இருந்தது.  

செப்டம்பர் காலாண்டில் வங்கியின் செயல்பாட்டு லாபம் அதிகரித்துள்ள காரணத்தினால் நிகர லாபமாக ரூ. 369.30 கோடியை ஈட்டியுள்ளதாக இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மகேஷ் குமார் ஜெயின் தெரிவித்துள்ளார். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP