Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைனில் கலக்கும் பட்டாசு விற்பனை!

 தீபாவளி என்றதும் அனைவருக்கும் நினைவு வருவது பட்டாசுதான். இந்த பட்டாசுகளை கடைகளில் மட்டுமே விற்பனை செய்து வந்த காலம் மாறி, இப்போது ஆன்லைனிலும் விற்பனையாகி வருகிறது.

இவ்வாறு ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தும் வருகிறது.
 
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஆன்லைனில் பட்டாசு விற்பனை 100 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதாக ஆன்லைனில் பட்டாசு விற்பனையை மேற்கொள்ளும் சிவகாசியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
ஆக வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வர்த்தகத் துறை தீபாவளி கொண்டாட்டங்களிலும் தனது முத்திரையை பதித்துள்ளது.
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ