Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யுனைட்டட் ப்ரெவெரீஸ் லாபம் அதிகரிப்பு!

 கிங்பிஷர் பீரை உற்பத்தி செய்யும்  யுனைட்டட் ப்ரெவெரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 11.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் செப்டம்பர் காலண்டில் யுனைட்டட் ப்ரெவெரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 11.6 சதவீதம் உயர்ந்து 48.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 42.6 கோடி ரூபாயாக இருந்தது.

தென் இந்தியாவில் 4 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதால்  யுனைட்டட் ப்ரெவெரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 48 கோடியாக அதிகரித்துள்ளது. 

அதுபோல்,  விஜய் மல்லையாவுக்கு சொந்தமான  விஸ்கி மற்றும் ஒயின்  மதுபானங்களை உற்பத்தி செய்யும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ்  நிறுவனத்தின் நிகர லாபம் 929 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலத்தில் 27 கோடி நஷ்டத்தை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close