Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான்கு பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்வாக இயக்குநர்கள் நியமனம்

ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி உட்பட நான்கு பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்வாக இயக்குநர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
 
அதன்படி ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்த சுரேஷ் என் படேல், ஆந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தேனா வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்த ஆர்கே தக்கார், கொல்கத்தாவைச் சேர்ந்த யூகோ வங்கியின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல் கார்ப்பரேஷன் வங்கியின் நிர்வாக இயக்குநராக ஜே.கே. கர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இப்போது இந்தியன் வங்கியின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வரும் மகேஷ் குமார் ஜெயின், அவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ