Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோல்டு பாண்டின் விலை ரூ. 2684

மத்திய அரசாங்கம் சமீபத்தில் அறிவித்த கோல்டு ஃபண்ட் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாண்டுக்கான விலை ரூ.2684 என நிர்ணயித்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. 
 
இந்த திட்டத்தின் கீழ் நவம்பர் 5-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யமுடியும். 

விண்ணப்பம் செய்தவர்களுக்கு கோல்டு பாண்டுகள் நவம்பர் 26-ஆம்ஆன்று தேதி வழங்கப்படும். இதற்கு 2.75% வட்டி கிடைக்கும். 

இந்த திட்டத்தில் தனிநபர் குறைந்தபட்சமாக 2 கிராமும், அதிகபட்சமாக 500 கிராமும் முதலீடு செய்ய முடியும். 
24 காரட் தங்கத்தின் கடந்த ஒரு வார சராசரி விலையின் அடிப்படையில் பாண்டின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
முதலீட்டுக் காலம் 8 வருடம் ஆகும். 5 வருடத்தில் முதலீட்டிலிருந்து வெளியேற முடியும்.
 
முதலீட்டின் மூலமாக கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும். 
மேலும், நீண்ட கால முதலீட்டுக்கு மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். இந்த பாண்டிற்கான முதிர்வுத் தொகை அன்றைய தங்கத்தின் விலையைப் பொறுத்து அமையும்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ