Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி கமாடிட்டி டிரேடிங்கிலும் அதிரடி நடவடிக்கைகள்: செபி

கமாடிட்டி பொருட்களின் விலை சமீப நாட்களில் அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதற்கு கமாடிட்டி சந்தையில் நடக்கும் சில செயற்கை விலையேற்ற வேலைகள் காரணமாக இருப்பதாக  புகார்கள் எழுந்து வருகின்றன. இந்தப் புகார்களை அடுத்து சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி, இனி கமாடிட்டி சந்தையிலும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

பருப்பு வகைகளின் விலை கண்டபடி உயர்ந்து வந்ந்தையடுத்து அதிரடியாக சோதனைகள், பதுக்கல் மீட்புகள் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் பருப்பு மட்டுமில்லாமல், சோயா, தனியா, ஜீரகம் மற்றும் சென்னா ஆகியவையும் விலை உயர்ந்து வர்த்தகமாயின. 

ஆனால் இந்த விலை உயர்வுக்கும் சந்தையில் உள்ள சிலர் செயற்கையாக கமாடிட்டிகளின் விலைகளை ஏற்றும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து செபி கமாடிட்டி சந்தையிலும் இனி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அதிரடியாக எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close