Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் கார் குத்தகை திட்டம்!

ந்தியாவில் கேப் கார்களை குத்தகைக்கு விட ஒலா மற்றும் நிசான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 
 
இந்தியாவில் மொபைல் ஆப் மூலமாக தனிநபர் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனமான ஒலா இந்தியா நிறுவனத்தின் நிதியுதவியுடன் நடைபெறும் ஓலா பிளீட் டெக்னோலாஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன், நிசான்  இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த திட்டத்தின்படி ஓட்டுநர்களுடன் கூட்டு சேர்ந்து நிசான் மற்றும் டட்சன் பிராண்டு கார்கள் வாங்கமுடியும். இதனால் அவர்கள் இனி கார்களை குத்தகைக்கு எடுத்து ஓலாவுடன் இணைந்து ஒரு தொழில்முனைவேர் போல் செயல்படமுடியும்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ