Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரிப்பு!

நம் நாட்டில் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
இந்தியாவில், கடந்த இரண்டு காலாண்டுகளாக குறைந்து இருந்த ஸ்மார்ட்போன் சந்தை விற்பனை செப்டம்பர் காலாண்டில் அதிகரித்துள்ளது.
 
குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரிப்பு மற்றும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் மொபைல் போன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். குறிப்பாக மூன்று செல்போனில் ஒரு போன் ஆன்லைன் மூலம் விற்பனையாவதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தை முந்தைய காலாண்டை 12 சதவிகிதம் வளர்ந்துள்ளது. அதுபோல் சென்ற ஆண்டு இதே காலத்தைவிட 20 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ