Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாம் இல்லாத போதும் நம் குடும்பம் நன்றாக இருக்க செய்ய வேண்டிய ஒரு மிக முக்கிய விஷயம்..!

நம் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்தால் இந்த வாழ்க்கை எவ்வளவு அழகானதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும் என்பதை மூன்றே நிமிடங்களில் நமக்கு காட்டுகிறது தாய் இன்ஷூரன்ஸ் நிறுவனம் விளம்பரத்துக்காக எடுத்த இந்தக் குறும்படம் .

இந்தக் குறும்படத்தை பார்த்த பிறகு நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எதாவது ஒரு நல்ல காரியம் செய்வோம். நமக்காக இல்லாவிட்டாலும் நம் குடும்பத்துக்காக ஒரு நல்ல காரியம் செய்தே தீர்வோம். முதலில் இந்தக் குறும்படத்தின் கதையைப் பார்ப்போம்.
 
ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஒரு வீட்டில் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறான் ஒரு இளைஞன். தன்னைச் சுற்றியிருக்கும் தான் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் எந்த வித எதிர்பார்ப்புமில்லாமல் தன்னால் முயன்ற உதவியை செய்கிறான்.
 
ஏழைக் குழந்தையின் கல்விக்காக தன்னிடம் இருக்கும் மொத்த பணத்தையும் தருகிறான். சொல்லப்போனால் அவன் பெரிய பணக்காரனும் இல்லை. அவனுக்கும் நிறைய பிரச்னைகள் இருக்கிறது.
 
அவனது நடவடிக்கைகளை சுற்றிலும் இருப்பவர்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். சிலர் அவனை ஒரு பைத்தியக்காரனைப் போல பார்க்கிறார்கள்.அப்போதும் அவன் உதவி செய்வதை நிறுத்தவில்லை. 
 
இவற்றையெல்லாம் அவன் எதுக்காக செய்கிறான்? இதனால் அவனுக்கு கிடைக்க போவது என்ன? இந்தக் குறும்படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

 

இந்தக் குறும்படத்தில் வருகின்ற இளைஞனைப் போல நாம் செய்கின்ற நல்ல காரியம் நமக்கானது மட்டுமல்ல . மற்றவர்களுக்காகவும் தான். லைஃப் இன்ஷூரன்ஸும் அப்படித்தான். நமக்காக மட்டுமில்லாமல் நாம் இல்லாத போதும் நம்மை சார்ந்த குடும்பத்துக்காக செய்கிற நல்ல விஷயம் தான் இன்ஷூரன்ஸ். 

 
நல்லதை நம்புவோம். நல்லதே நடக்கும்.

த.சக்திவேல்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ