Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனை! இந்த மாதம் துவக்கம்

இந்த மாதம் முதல் சில்லறை சந்தையில் மேகி நூடுல்ஸ் விற்பனை மீண்டும் துவங்கும் என நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
 
நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டது.
 
இப்போது 3 ஆய்வுக் கூடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது என நிரூபணமாகியுள்ளதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்தது. 
 
தரச்சோதனையில் பாதுகாப்பனதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு தழுவிய அளவில் மேகி நூடுல்ஸ் சில்லறை விற்பனை இந்த மாதத்திலிருந்து மீண்டும் துவங்கும் என நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ