Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

 புகை அளவு  மோசடி விவகாரம் தொடர்பாக வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு  மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஜெட்டா, ஆக்டாவியா, ஆடி ஏ4 மற்றும் ஆடி ஏ6 ஆகிய கார்களின் புகை அளவு வெளியேற்றம் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாக ஆட்டோமோடிவ் ரிசர்ச்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா (ஏஆர்ஏஐ) நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது.

முன்னதாக இந்திய சாலைகளில் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த மாடல் கார்கள் ஓடும்போது அவை வெளியேற்றும் புகை அளவு குறித்து ஏஆர்ஏஐ சோதனை நடத்தியது. இப்போது இதில் மாறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கு  மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP