Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!

 தெற்கு ரயில்வேயில் பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக ரயில்வே அரையாண்டு செயல்பாட்டு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் பயணிகள் எண்ணிக்கையைப் பொருத்தவரை கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாத காலத்தில்  கணிசமாக அதிகரித்துள்ளது.

அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 6.4 கோடி பயணிகள் என்று இருந்த பயணிகளின் எண்ணிக்கை,  ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 6.8 கோடியாக உயர்ந்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் வருவாய், கடந்த ஆண்டைவிட நடப்பு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான அரையாண்டில் 5.61 சதவிகிதம் உயர்ந்து ரூ. 4545.96 கோடியாக அதிகரித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ