Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் விலை சவரனுக்கு 752 ரூபாய் குறைந்தது! காரணம் என்ன?

 தங்கம் விலை கடந்த தினங்களாக தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு 100 ரூபாயும், சவரனுக்கு 752 ரூபாயும்  குறைந்து காணப்படுகிறது. 

 

சென்னையில் இன்று மாலை நேர நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 12 ரூபாய் குறைந்து 2,624 ரூபாயாக இருக்கிறது.  
 
22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 12 ரூபாய் குறைந்து 2,453 ரூபாய்க்கும், ஒரு சவரன் 96 ரூபாய் குறைந்து 19,624 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  
 
காரணம் என்ன?
 
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை தவிர்த்து வருகிறார்கள். இதன் காரணமாக தங்கத்தின் மதிப்பு சரிந்து வருகிறது.
 
இதனால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுவதால் இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை கொஞ்சம் குறையும். தீபாவளி முடியும் வரை இதே சூழ்நிலை இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ