Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவுக்கு உதவ ரெடி! அமெரிக்கா அறிவிப்பு

 பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றமடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அமெரிக்கா எதிர்பார்க்கும்  வகையில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடையவில்லை.

குறிப்பாக உள்கட்டமைப்பு உட்பட பல பொருளாதாரச் சவால்களை இந்திய அரசு எதிர்கொண்டுள்ளது. எனவே இதுபோன்ற பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க உயர் அதிகாரி அருண் எம் குமார் கூறியுள்ளார்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ