Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீபாவளி முகூர்த் டிரேடிங் - ஒரு பார்வை

வி.கோபால கிருஷ்ணன், Askgopal.com

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. இந்த பண்டிகையின் தாக்கம் வடஇந்தியாவில் அதிகம் இருக்கும்.அதாவது அவர்களின் உணர்வுகளுடன் கலந்திருக்கும். அன்றைய தினத்தில் செய்யும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

பங்குச் சந்தை வர்த்தகம் வட இந்தியர்களின் வாழ்க்கையுடன் ஒன்றிய விஷயமாகும். மேலும் மும்பையில் அதிகமாக வாழும் குஜராத்திகள் மற்றும் மார்வாடிகள் தீபாவளியை புத்தாண்டு போல கொண்டாடுகிறார்கள். பிறக்க இருக்கும் புத்தாண்டை சம்வாத் என்றழைப்பார்கள். எனவே அன்றைய தினத்தில் செல்வத்தைக் குறிக்கும் லக்ஷ்மியை வணங்குவார்கள். இந்த ஆண்டு சம்வாத் 2072 என்று வழங்கப்பட்டு நவம்பர் மாதம் 11ம் தேதி மாலை 5.45 மணியிலிருந்து 6.45 மணிவரை முகூர்த்த வர்த்தகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆண்டுகளில் முகூர்த் வர்த்தகம் எப்படி இருந்தது என்பதை அட்டவணையில் பார்க்கவும்.

முகூர்த் டிரேடிங் விவரம்!

வருடம்

முடிவடைந்தது சென்செக்ஸ் புள்ளி

அதிகரித்த புள்ளிகள்

கிடைத்த வருமானம்.(%)

21.10.2014

268561

10

0.23

03.11.2013

21239

43

0.20

13.11.2012

18619

-51.47

-0.28

26.10.2011

17289

33.97

0.20

05.11.2010

21005

111.39

0.53

17.10.2009

17326

3.19

0.02

28.10.2008

9008

498.52

5.86

09.11.2007

18908

-151.33

-0.79

21.10.2006

12737

27.42

0.22

01.11.2005

7944

51.78

0.66

12.09.2004

5964

9.70

0.16

25.10.2003

4802

44.91

0.94

04.11.2002

2987

37.00

1.25

14.11.2001

3113

35.85

1.17

கடந்த14 வருடங்களில் 2 ஆண்டுகள் மட்டும்தான் முகூர்த் டிரேடிங் மைனஸில் முடிவடைந்துள்ளது. மேலும் அன்றைய தினத்தில் மொத்தமாக ஒருமணி நேரம்தான் வர்த்தகம் நடைபெறும் என்பதால் வர்த்தக எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த வருடம் முகூர்த்த வர்த்தகம் தினத்துக்கு முன்பாக பீகார் தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளது. அதனுடைய முடிவின் அடிப்படையில் சந்தையின் போக்கு செயல்பட வாய்ப்புள்ளது.

 


 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP