Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த வருஷம் 'தீபாவளி கிப்ட்' உங்களுக்கு கிடைச்சிருச்சா?

 


தீபாவளி பண்டிகைத் தருணத்தில் ஸ்வீட், துணிமணி, பட்டாசு என்று ஏதாவது ஒரு 'தீபாவளி கிப்ட்' பாக்ஸ் தனது ஊழியர்களுக்கு வழங்குவதை சில கார்ப்பரேட் நிறுவனங்கள் வழக்கமாக வைத்திருக்கும். 

ஆனால் இவ்வாறு தீபாவளிக்கு கிப்ட் வழங்கும் நடைமுறை   இப்போது 20 சதவிகிதம் குறைந்துள்ளதாக இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (அசோசெம்) நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த மூன்று வாரங்களில் சென்னை, பெங்களூர், டில்லி உட்பட 10 நகரங்களில் ஆட்டோமொபைல், வங்கி, தகவல் தொழில்நுட்பம், மருந்து, ரியல் எஸ்டேட் உட்பட பல துறைகளில் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் தீபாவளி பண்டிகை திட்டம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இதில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பருவமழை பற்றாக்குறை, குறைந்து வரும் நிறுவனங்களின் வளர்ச்சி போன்ற பல காரணங்களால் தீபாவளிக்கு கிப்ட் வழங்குவது கடந்த ஆண்டைவிட 20 சதவிகிதம் குறைந்துள்ளதாக அசோசெம் தெரிவித்துள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ