Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு!

 பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 250 ரூபாய் வரை  மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

பருப்பு இறக்குமதியை குறைத்து உள்ளூர் சாகுபடியை பயன்படுத்தும் வகையில், நடப்பு பருவத்துக்கான குறைந்த பட்ச ஆதார விலை பருப்பு வகைளுக்கு 250 உயர்த்தப்பட்டுள்ளது. 

அதன்படி மசூர் பருப்புக்கு குவிண்டால் 3,325 ரூபாயாகவும், கடலைப்பருப்பு குவிண்டாலுக்கு 3,425 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
அதுபோல், கோதுமைக்கான குறைந்த பட்ச ஆதார விலை 75 அதிகரித்து 1,525 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பார்லிக்கு 75 அதிகரித்து 1,225 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ