Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

­கவின்கேர் - எபிலிட்டி விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

 கவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2016, ஊனமுற்ற நபர்கள், அவர்களுக்குரிய நிபுணத்துவ தளங்களில் செய்திருக்கும் சாதனைகளை கெளரவித்து கொண்டாடுகிறது. இந்த ஆண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் இப்போது வரவேற்கப்படுகின்றன.

 
ஊனமுற்ற நபர்களிடம் வெளிப்படாமல் மறைந்திருக்கும் திறன்கள் மீது விழிப்புணர்வை உருவாக்குவதும், அவர்களது சாதனைகளை உலகிற்கு வெளிப்படுத்துவதும் மற்றும் ஊனமுற்றவர்கள் மீதான வழக்கமான கருத்தாக்கங்களை சவாலுக்கு உட்படுத்துதலும் இந்த விருதுகளின் நோக்கமாகும்.
 
இப்போது, 14வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2016க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் 2015, நவம்பர் 27 அன்று அல்லது அதற்கு முன்பாக எபிலிட்டி ஃபவுண்டேஷன்-ஐ வந்தடைய வேண்டும்.
 
இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வானது சென்னையில் 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். 
 
இதுகுறித்த விவரங்களையும், விண்ணப்பப் படிவங்களையும் பெற www.cavinkare.com   அல்லது www.abilityfoundation.org  என்ற இனணயதளத்தில் லாக் ஆன் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு +91 89396 75544 என்ற செல்போனைத் தொடர்பு கொள்ளலாம்.
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ