Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேஸ்புக் நிறுவனத்தின் லாபம் 5,800 கோடியாக அதிகரிப்பு!

 உலக அளவில் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் நிகர லாபமாக 5,824 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் மூன்றாவது காலாண்டில் 41 சதவிகிதம் உயர்ந்து 4.5 பில்லியன் டாலராக (ரூ.29,250) அதிகரித்துள்ளது. 

பேஸ்புக் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டைவிட 11 சதவிகிதம் உயர்ந்து 896 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 5,824 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
 
மொபைல் விளம்பர வணிகம் மற்றும் தினசரி பேஸ்புக் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ