Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தர கட்டுப்பாட்டு எதிரொலி டாக்டர் ரெட்டிஸ் பங்குகள் 15 சதவிகிதம் சரிவு!

 முன்னணி பார்மா நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் பங்குகள் 15 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

டாக்டர் ரெட்டிஸ்  நிறுவனத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுளம், தெலுங்கானாவில் உள்ள மிர்யாலாகுடா மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வாடா என மூன்று மருந்து உற்பத்தி ஆலைகள் உள்ளன.

இந்த மருந்து உற்பத்தி செய்யப்படும் ஆலைகளில் போதிய தர கட்டுப்பாட்டு நடைமுறைகள் இல்லை என அமெரிக்க சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பான அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் டாக்டர் ரெட்டிஸ்  நிறுவனத்திற்கு எச்சரிக்கைக் கடிதம் எழுதியுள்ளது.
 
இதனால் இன்றைய வர்த்தகத்தில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் பங்குகள் 15 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP