Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு 428 கோடி ரூபாய் இழப்பு

 இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ்  நிறுவனத்திற்கு 428 கோடி ரூபாய் நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த நிதி ஆண்டின் செப்டம்பர் காலண்டில்  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிகர லாபமாக 3,290.86 கோடி ரூபாயை ஈட்டி இருந்தது. 

ஆனால், இப்போது செப்டம்பர் காலண்டில் நிறுவனத்திற்கு  428 கோடி ரூபாய் நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
 
அந்நிய செலாவணி மறுமதிப்பீடு, சீனாவில் பலவீனமான  ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் விற்பனை மற்றும் உள்நாட்டில் மோசமான கார் விற்பனையால் 428 கோடி ரூபாய் நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP