Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேவை வரி மீண்டும் அதிகரிப்பு! மொபைல் ரீசார்ஜ், வங்கிச் சேவை செலவினங்கள் அதிகரிக்கும்

தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்காக சேவை வரியை 0.5 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த பட்ஜெட்டில் 12.36 சதவிகிதமாக இருந்த சேவை வரியை 14 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தி இருந்தது. இந்த சேவை வரி உயர்வு கடந்த ஜூன் 1 ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. 

இப்போது, தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்காக சேவை வரி 0.5 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
 
இந்த வரி உயர்வு நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
இதையடுத்து மொபைல் ரீசார்ஜ், வங்கிச் சேவை, ரயில், காப்பீடு, கிரெடிட் கார்டு, சுற்றுலாப் பயணம் உட்பட பல செலவினங்கள் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ