Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்! வசதிகள், விலை விவரம்?

நம் நாட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் வாட்ச் விற்பனையை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளது. 
 
ஆப்பிள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்சை 38 மி.மீ, 42 மி.மீ அளவுகளில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆரம்ப விலை ரூ.30,900. அதிகபட்சமாக உயர் ரக மாடல் ரூ.14 லட்சம். 
 
வசதிகள்: 
 
இந்த ஸ்மார்ட் வாட்சை ஆப்பிள் ஐபோன் 5 முதல் அனைத்து ஆப்பிள் போன்களுடனும் இணைத்து பயன்படுத்தலாம்.
வாட்ச்-ல் போன் அழைப்புகளை ஏற்க முடியும். இமெயில் பார்க்கலாம். வைபை, புளூடூத் வசதி, ஆக்ஸிலரோ மீட்டர், உடல் நலம் புதிய டிஜிட்டல் டச் தொழில் நுட்பம் என ஏராளமான வசதிகள் உள்ளன.
 
விலை விவரம்:
 
38 மி.மீ அளவில் சில்வர் அலுமினியம் ஸ்போர்ட்  பேண்ட் ஆரம்ப விலை ரூ.30,900. ஒயிட் ஸ்போர்ட் பேண்ட் ஆரம்ப விலை ரூ.34,000.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் விலை ரூ.48,900, ரூ.52,900. ஆப்பிள் வாட்ச் எடிசன் 18 காரட் கோல்டுடன் கூடியது ரூ.8.2 லட்சம்.
வெள்ளை நிற ஸ்போர்ட்ச் பேண்ட் ரூ.9.9 லட்சம். அதிகபட்ச விலையாக உயர் ரக மாடல் ரூ.14 லட்சம்.
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ