Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ்நாட்டில் ராயல் என்பீல்டு உற்பத்தி திறன் அதிகரிப்பு

இரு சக்கர வாகன தயாரிப்பில் மிகவும் பிரபலமாகத் திகழும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் எய்கர் மோட்டார்ஸ் நிகர லாபமாக 255 கோடியை ஈட்டியுள்ளது.

 
நடப்பு நிதி ஆண்டின் செப்டம்பர் காலண்டில் எய்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 55 சதவிகிதம் உயர்ந்து 255 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 165 கோடி ரூபாயாக இருந்தது.
 
இப்போது ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள் தேவை அதிகரித்து வருவதாக எய்கர் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதனை ஈடுகட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள ராயல் என்பீல்டு தொழிற்சாலையில் உற்பத்தி திறனை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ