Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீளாத சந்தைகள் சென்செக்ஸ் 26121, நிஃப்டி 7915

3.30 மணி நிலவரம்
 
சென்செக்ஸ் 144 புள்ளிகள் குறைந்து 26121 புள்ளிகளுக்கும், நிஃப்டி 39 புள்ளிகள் குறைந்து 7915 புள்ளிகளுக்கும் வர்த்தகமாகி வருகின்றன.
 
10 கிராம் தங்கம் 197 ரூபாய் அதிகரித்து 25720 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 190 ரூபாய் அதிகரித்து 35,100 ரூபாய்க்கும், கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு  19 ரூபாய் அதிகரித்து 2969 ரூபாய்க்கும் வர்த்தகமாகின்றன.  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.36 ரூபாயாக வர்த்தகமாகிறது. 
 
வங்கி, கேப்பிட்டல் கூட்ஸ், ஹெல்த் கேர், ஐடி, டெக்னாலஜி போன்ற துறைகள் மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்தன. அட்டோமொபைல் துறை 227.73 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமனது குறிப்பிடத்தக்கது. உலக சந்தைகளின் இறக்கம் மற்றும் தேக்கம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
 
சென்செக்ஸில் வர்த்தகமான 2747 பங்குகளில் 1484 பங்குகள் ஏற்றத்திலும், 1132 பங்குகள் இறக்கத்திலும், 131 பங்குகள் மாற்றமின்ரியும் வர்த்தகமானது. நிஃப்டியில் 18 பங்குகள் அதிகரித்தும், 32 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. 
 
ஏற்றப் பங்குகள் (%)
டாடா மோட்டார்ஸ் 3.94
பேங்க் ஆஃப் பரோடா 2.63
மாருதி சுஸிகி 2.33
ஏசியன் பெயின்ட்ஸ் 1.90
பிஎன்பி 1.77
 
இறக்கப் பங்குகள் (%)
சன் பார்மா -5.78
கெர்ய்ன் இந்தியா -3.75
பிஹெச் இஎல் -3.60
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் -3.57
அதானி போர்ட்ஸ் -3.27
 
 
 
 
2.30 மணி நிலவரம்
 
சென்செக்ஸ் 170 புள்ளிகள் குறைந்து 26095 புள்ளிகளுக்கும், நிஃப்டி 51 புள்ளிகள் குறைந்து 7903 புள்ளிகளுக்கும் வர்த்தகமாகி வருகின்றன.
 
10 கிராம் தங்கம் 203 ரூபாய் அதிகரித்து 25726 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 193 ரூபாய் அதிகரித்து 35,103 ரூபாய்க்கும், கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு  14 ரூபாய் அதிகரித்து 2964 ரூபாய்க்கும் வர்த்தகமாகின்றன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சந்தை ஏற்றத்தில் கூட நிறைவடைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
 
அமெரிக்காவின் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஃபிச்  (Fitch Inc) என்கிற ரேட்டிங் நிறுவனம்  பிஹார் சட்டமன்ற தேர்தல் இந்தியாவின் நடுத்தர பொருளாதாரத்தை பாதிக்காது என்று கருத்து தெரிவித்திருக்கிறது.
 
"பிஹார் தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றிருந்தால் கூட உடனடியாக எந்த வலுவான மாற்றமும் ராஜ்ய சபாவில் ஏற்பட்டிருக்காது, அதொடு இந்த தேர்தல் தோல்வியால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கும் முடிவுகளிலும் எந்த மாற்றமும் இருக்காது"  என்பதை  ஃபிச் நிறுவனத்தின் இயக்குநர் தாமஸ் ரூக்மேக்கர் தெரிவித்திருக்கிறார்.
 
இந்திய சந்தைகளில் காலை 11.30 மணிக்கு ஏற்றத்தில் வர்த்தகமாகிய துறைகள் தற்போது கூடுதல் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன, அதோடு இன்னும் சில துறைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.
 
சற்று முன் வர்த்தகமாகத் தொடங்கி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அமெரிக்க சந்தைகள் தேக்கத்திலும், ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்திலும் வர்த்தகமாகின்றன. ஆசிய சந்தைகளில் நிக்கி மற்றும் ஷாங்காய் காம்போஸைட் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. மற்ற ஆசிய சந்தைகள் இறக்கத்திலேயே வர்த்தகமாகின்றன. 
 
ஏற்றப் பங்குகள் (%)
டாடா மோட்டார்ஸ் 2.70
பேங்க் ஆஃப் பரோடா 2.18
மாருதி சுஸிகி         2.10
ஏசியன் பெயின்ட்ஸ் 1.82
ஐடிசி                 1.81
 
இறக்கப் பங்குகள் (%)
சன் பார்மா         -5.53
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் -4.92
கெர்ய்ன் இந்தியா -3.75
அதானி போர்ட்ஸ் -3.53
 
 
 
11.30 மணி நிலவரம்
 
சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்து 25964 புள்ளிகளுக்கும், நிஃப்டி 93 புள்ளிகள் குறைந்து 7861 புள்ளிகளுக்கும் வர்த்தகமாகி வருகின்றன.
 
சென்செக்ஸில் இன்று வர்த்தகமாகும் 2260 பங்குகளில் 1098 பங்குகள் ஏற்றத்திலும், 1066 பங்குகள் இறக்கத்திலும், 96 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகி வருகின்றன. அதே போல் நிஃப்டி 50 யில் 7 பங்குகள் ஏற்றத்திலும், 43 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. 
 
சந்தை தொடக்கத்தில் இறக்கத்தில் இருந்த தங்கம், வெள்ளி மற்றும் கச்சா எண்ணெய் தற்போது ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. 10 கிராம் தங்கம் 172 ரூபாய் அதிகரித்து 25695 ரூபாய்க்கும்மொரு கிலோ வெள்ளி 205 ரூபாய் அதிகரித்து 35,115 ரூபாய்க்கும், கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு  27 ரூபாய் அதிகரித்து 2977 ரூபாய்க்கும் வர்த்தகமாகின்றன. இந்த ஏற்றம் சந்தை சற்றே மீண்டு எழுவதை பிரதிபலிக்கிறது.
 
தற்போது ஆடோமொபைல், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், எஃப் எம் சி ஜி, ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் போன்ற துறைகள் சற்றே ஏற்றத்தில் வர்த்தகமானாலும், மீதமுள்ள சந்தைகள் இறக்கத்திலேயே வர்த்தகமாகின்றன. 
 
உலக அளவில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க மற்றும் ஐரோப்பியாவின் பெரும்பாலான சந்தைகள் ஏற்றத்திலேயே நிறைவடைந்திருக்கின்றன. இன்று ஆசிய சந்தைகளில் நிக்கி, ஷாங்காய் காம்போஸைட் மற்றும் ஸ்ட்ரைட் டைம்ஸ் சந்தைகளைத் தவிர மற்ற சந்தைகள் இறக்கத்திலேயே வர்த்தகமாகின்றன. 
 
சற்று முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இந்திய பொருளாதாரத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு சந்தையில் உள்ள வர்த்தகர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கலாம் என்றும் அனலிஸ்ட்கள் கூறுகிறார்கள்.
 
ஏற்றப் பங்குகள் (%)
பேங்க் ஆஃப் பரோடா 2.24
இ என்பி 2.11
டாடா மோட்டார்ஸ் 1.97
மாருதி சுஸிகி 1.96
எஸ் பி ஐ 1.01

இறக்கப் பங்குகள் (%)
சன் பார்மா -4.53
ஐடியா செல்லூலர் -3.34
பி ஹெச் இ எல் -3.24
கெர்ய்ன் இந்தியா -3.12
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் -2.84

 

 

 

10.00 மணி நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (9.11.2015) காலை சற்று வலுவான சரிவுடன் வர்த்தகமாகத்தொடங்கியது. தற்போது சென்செக்ஸ் 390 புள்ளிகள் குறைந்து 25874 புள்ளிகளுக்கும், நிஃப்டி 121 புள்ளிகள் குறைந்து 7739 புள்ளிகளுக்கும் வர்த்தகமாகி வருகின்றன.

            
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 318 ரூபாய் குறைந்து  25523 ரூபாயாக வர்த்தகமாகிறது. வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு  590  குறைந்து   34910  ரூபாயாக வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  89 ரூபாய்  குறைந்து   2950  ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 0.65  குறைந்து  66.40 ஆக வர்த்தகமாகிறது.

இன்றைய சந்தையின் இறக்கத்திற்கு பிரதமரின் பிஜேபி கட்சி பீஹார் சட்டமன்ற தேர்தலில் தோல்வி கண்டது தான் என்று அனலிஸ்ட்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மாநில சட்ட மன்றங்களில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாகத்தான் ராஜ்ய சபைக்கான மந்திரிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சட்டமன்றத்தில் போதுமான எம்.எல்.ஏக்கல் இல்லை என்றால் மீண்டும் ராஜ்ய சபையில் போதுமான பெரும்பான்மை இல்லாமல் பிரதமர் கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் தற்போது தேங்கிக் கிடப்பது போலவே இருக்கும். எனவே தான் பயத்தில் சந்தை இந்த இறக்கத்தை சந்திக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள் அனலிஸ்ட்கள்.


விலை அதிகரித்த பங்குகள்

டாடா மோட்டார்ஸ்    2.17

எஸ் பி ஐ              1.26

பி என் பி              0.90

பேங்க் ஆஃப் பரோடா 0.81

பிபிசிஎல்              0.60

இறக்கப் பங்குகள்

சன் பார்மா            -4.52

டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்-3.74

ஐடியா செல்லூலர்    -3.12

கெர்ய்ன் இந்தியா     -2.82

அம்புஜா சிமென்ட்ஸ்  -2.57

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ