Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியின் துணைத் தலைவராக ரகுராம் ராஜன் நியமனம்

 சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியின் துணைத் தலைவராக  இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கவர்னர் ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு டிசம்பரில் சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியின் இயக்குனர்கள் குழுவில் ரகுராம் ராஜன் சேர்ந்தார். 

இந்த நிலையில் வளர்ந்து வரும் சந்தையில் ஒரு குரலாக சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியின் (Bank for International Settlements) துணைத் தலைவராக  ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த வங்கியின் துணைத் தலைவராக ராஜன் மூன்று ஆண்டு காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியின்  துணைத் தலைவராக  இந்தியாவைச் சார்ந்த ஒருவரை நியமிப்பது இதுவே முதல் முறையாகும்.
 
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் செப்டம்பர் 2016 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close