Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாடிக்கையாளர்களுக்கு பரிசு! வோக்ஸ்வேகன் திட்டம் எடுபடுமா?

 வோக்ஸ்வேகன் கார் நிறுவனம் தனது டீசல் ரக கார்களை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 1,000 டாலர்கள் மதிப்புடைய பரிசு அட்டைகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டீசல் ரக கார்களில் மோசடி நோக்கில் மென்பொருள் பொருத்தி அதன் மூலம் புகையின் அளவை மறைத்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது.

இந்த நிலையில் வோக்ஸ்வேகனின் மதிப்பை சரிக்கட்டும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு இந்திய மதிப்பில் 65 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாகவும், இதன் மூலம் இதுபோன்ற கார்களை வைத்துள்ள 4 லட்சத்து 82 ஆயிரம் பேர் பலன் அடைவார்கள் என்றும் வோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த திட்டம் எடுபடுமா?

உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ