Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6.80 லட்சம் பயணிகளை ஈர்த்த 'இன்கிரிடிபிள் இந்தியா 'பிரச்சாரம்!

 'இன்கிரிடிபிள் இந்தியா 'பிரச்சாரத்தின் மூலம் கடந்த அக்டோபர் மாதத்தில் 6.80 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 6.68 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை புரிந்து இருந்தனர்.

இப்போது 'இன்கிரிடிபிள் இந்தியா 'பிரச்சாரத்தின் மூலம் கடந்த அக்டோபர் மாதத்தில் 1.7 சதவிகிதம் உயர்ந்து 6.80 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளாக அதிகரித்துள்ளனர்.

எனினும், கடந்த ஆண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் 10,041 கோடி ரூபாய் அந்நிய செலாவணி வருவாய் ஆக கிடைத்துள்ளது. 

இது கடந்த அக்டோபர் மாதம் 9,611 கோடி ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளதாக  மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ