Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

15 துறைகளில் அந்நிய முதலீடு அளவு அதிகரிப்பு! மத்திய அரசு அதிரடி

 நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக 15 துறைகளில் அந்நிய முதலீட்டு அளவுகளை அதிகரித்துள்ளது. 

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அமைப்பின் ஒப்புதல் அளவை 3,000 கோடி ரூபாயில் இருந்து 5,000 கோடி ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது.  

பாதுகாப்புத் துறையில் 49 சதவிகிதம் வரையிலான அந்நிய முதலீட்டை ஆட்டோமேடிங் முறையிலேயே செய்ய அனுமதிக்கப்பட உள்ளது. இதற்குமுன் FIPB அமைப்பின் அனுமதி பெற்ற பின்னரே முதலீடு செய்ய முடியும் என்று இருந்தது.
 
பிராட்காஸ்டிங் துறைக்கான அந்நிய முதலீட்டு அளவுகளை 74 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதம் வரை அனுமதிக்க  ஒப்புதல் அளித்துள்ளது.
 
தேயிலை, காபி, ரப்பர், ஏலக்காய் போன்ற அனைத்திற்குமான பயிரிடுதல் துறையில் 100 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதி அளித்துள்ளது.
 
மேலும் ரீடைல் வர்த்தகத்தில் 30 சதவிகிதம் வரை அந்நிய முதலீட்டை அனுமதி அளிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான முடிவுகள் வெளியிட உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ