Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் லண்டன் பயணம் என்ன எதிர்பார்க்கலாம்?

 பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இன்று இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த பயணத்தின் போது இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் பல்வேறு தலைவர்களை மோடி சந்தித்து பேசுகிறார்.

கேமரூனுடன் லண்டன் மற்றும் செக்கர்ஸ் நகரில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 
இந்த பேச்சுவார்த்தையில் பொருளாதாரம், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இங்கிலாந்து-இந்தியா தலைமை செயல் அதிகாரிகளுக்கான வணிக நிகழ்விலும் (UK-India CEO business event) பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ