Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரே நாளில் 1 லட்சம் கோடி வர்த்தகம்! அசத்தும் ஆன்லைன் விற்பனை

சீனாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமானஅலிபாபா நிறுவனம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 11ம் தேதி சீனாவில் ``ஒரு தின வர்த்தகம்’’ நடத்தி வருகிறது.

நேற்று தொடங்கிய இந்த வர்த்தகத்தில் முதல் எட்டு நிமிடத்தில் மட்டும் 6,500 கோடி ரூபாய் (100 கோடி டாலர்) வர்த்தகம் நடந்துள்ளது.

முதல் 12 மணிநேரத்தில் 58,500 கோடி (900 கோடி டாலர்) வர்த்தகம் நடந்ததாக அலிபாபா தெரிவித்துள்ளது.

நேற்று ஒரு நாளில் மட்டும் 14.3 பில்லியன் டாலர்  (இந்திய மதிப்பில் 94,380 கோடி) வர்த்தகம் நடந்ததாக அலிபாபா தெரிவித்துள்ளது.

சீனாவில் ``ஒரு தின வர்த்தகம்’’ கடந்த 2009ம் ஆண்டில் இருந்து அலிபாபா தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தினத்தில் ஒவ்வொரு வருடமும் வர்த்தகம் உயர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ