Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரபல நடிகர் மற்றும் தொழிலதிபருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை!

பிரபல தொழிலதிபரும், திரையுலக பிரமுகருமான அட்லஸ் ராமச்சந்திரனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உலக தங்க நகை வர்த்­த­கத்தின் கேந்­திர மையங்­களில் ஒன்றாக துபாய் விளங்­கு­கி­றது.   துபாயில் தங்க நகை வர்த்­த­கத்தின் முக்­கிய புள்­ளி­களில் ஒருவர் எம்.எம். ராமச்­சந்­திரன்.

அட்லஸ் ஜூவ­லரி உரி­மை­யா­ள­ரான அவர், அட்லஸ் ராமச்சந்­திரன் எனும் பெயரில் பிர­ப­ல­மா­னவர்.  மத்­திய கிழக்கு நாடு­க­ளிலும் இந்­தி­யா­விலும் 50க்கும் அதிகமான கிளை­களைக் கொண்ட நிறு­வனம் அவருடையது.

மலை­யாள திரைப்­ப­டங்­களைத் தயா­ரித்த­துடன் திரைப்­படம் ஒன்றை அவர் இயக்­கியும் உள்ளார். பல படங்­களில் நடித்தும் இருக்­கிறார்.

 இந்த ­நி­லையில், ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸி­லுள்ள பல வங்­கி­க­ளிடம் பெற்ற 3.4 கோடி திர்ஹாம் கடனை அவர் திருப்பிச் செலுத்­த­வில்லை என குற்றம் சுமத்­தப்­பட்­டது.

இது தொடர்­பாக வங்­கிகள் செய்த முறைப்­பாட்டில் அவர் துபாய் போலி­ஸாரால் கைது செய்யப்பட்டார்.

 இந்த நிலையில் நிதி மோசடி தொடர்பாக அட்லஸ் ராமச்சந்திரனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ