Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேஸ்புக்கில் வெளியிடும் கருத்து குறித்து போலீஸ் விசாரணை அதிகரிப்பு!

 பேஸ்புக்கில் சிலர் வெளியிடும் கருத்துக்கள் சில சமயம் சர்ச்சையை உருவாக்குகிறது. இதனால் அந்த கருத்தை பதிவு செய்தவர் குறித்த விவரங்களை போலீஸ் அதிகாரிகள் விசாரிப்பது அதிகரித்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

அதன் விவரம்: 

பேஸ்புக்கில் சிலர் வெளியிடும் கருத்துக்கள் குறித்து  அந்த கருத்தை பதிவு செய்தவர் குறித்த விவரம், ஐபி அட்ரஸ், அவர் எங்கிருந்து பேஸ்புக்கை பயன்படுத்துகிறார் போன்ற தகவல்களை எங்களிடம் அரசு அதிகாரிகள் பெறுகின்றனர்.
 
இதில், 2015 ஆம் முதல் அரையாண்டில் 41,214 கணக்குகள் குறித்து அரசு அதிகாரிகள் விவரம் கேட்டுள்ளனர். இது 2014 ஆம் இறுதி அரையாண்டை விட 18% அதிகம். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ