Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் 13,000 கோடி முதலீடு வோடாபோன் தகவல்

 பிரதமர் நரேந்திரமோடி 3 நாள் பயணமாக இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றுள்ளார். அங்கு பிரிட்டிஷ் டெலிகாம் குழுமமான வோடாபோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) விட்டோரியோ சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி உடனான இந்த சந்திப்புக்கு பின் இந்தியாவில் 13,000 கோடி ரூபாய் அளவில் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாக வோடாபோன் சீஇஒ உறுதியளித்துள்ளார்.

இந்தியாவில், வோடாபோன் நிறுவனம் 2007ல் இருந்து டெலிகாம் சேவைகளை தொடங்கி நடத்தி வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் ரூ 1,11,000 கோடி அளவில் முதலீடுகளை   வோடபோன் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.  
 
இந்த நிலையில் இந்தியாவில் 13,000 கோடி ரூபாய் அளவில் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாக வோடாபோன் சீஇஒ உறுதியளித்துள்ளார்.
 
இதில் 8,000 கோடி ரூபாய் வோடாபோன் நிறுவனத்தை மேம்படுத்தவும், 3,000 கோடி ரூபாயில் புனே மற்றும் அகமதாபாத்தில் தகவல் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக வோடாபோன் தெரிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ