Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருமணம், பண்டிகை சீசனால் தங்கத்தின் தேவை 13 சதவிகிதம் அதிகரிப்பு!

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 13 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக உலக தங்கக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில் 238 டன் தங்கம் தேவைப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆண்டில் அது 13 சதவிகிதம் உயர்ந்து 268 டன்களாக உயர்ந்துள்ளது.

திருமணம் மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகைகளின் தேவை அதிகரித்ததே இதற்குக் காரணம் என்று உலக தங்கக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ