Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சச்சினையே கொந்தளிக்க வைத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

அமெரிக்காவில் ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட்டுக்காக சச்சின் சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது குடும்த்தினரின் பயண நெருக்கடி பற்றி கோபமாக சச்சின் ட்வீட் செய்துள்ளார்.

அதில், எனது குடும்ப உறுப்பினர்களின் வெய்ட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படவில்லை. இருக்கைகள் இருந்தும் பயணம் உறுதி செய்யப்படவில்லை.

இதனால் கடும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன். லக்கேஜ்களும் தவறான இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது அக்கறையின்மையும் பொறுப்பின்மையும் காட்டுகிறது என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது  கொந்தளித்துள்ளார்.

இதற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், ‘சாரி சச்சின், உங்கள்து லக்கேஜ் விவரங்களை உங்களது முழு பெயர், முகவரியுடன் அனுப்பினீர்கள் என்றால் நாங்கள் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும்’ என்று பதில் கூறியுள்ளது.

இதற்கு சமூக வலைத்தளங்களில் சச்சினின் முழு பெயர் கூட தெரியாத என பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை வறுத்து எடுத்து வருகின்றனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ