Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சார்... உடம்பு சரியில்லை சார். இப்படி உங்கள் மேலதிகாரிகளிடம் போன் செய்து சாக்குப்போக்கு சொல்பவரா? முதலில் இதை படிங்க

ஊழியர்கள் லீவ் வேண்டி தங்கள் மேலதிகாரிகளிடம் போன் செய்து சாக்குப்போக்கு சொல்வது குறித்து சமீபத்தில் இங்கிலாந்து  முழுவதும் 2,500 முதலாளிகள் மற்றும் ஊழியர்களிடம் ஒரு புதிய ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் காய்ச்சல், ஒற்றைத் தலைவலி, அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைந்து வருவது போன்ற சாக்குப்போக்கு காரணங்கள்  நம்பக்கூடியதாக இல்லை என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஊழியர்கள் தங்களுக்கு வாந்தி வருவதாக உள்ளது. லீவ் வேண்டும் என்று மேலதிகாரிகளிடம் கேட்பதை, மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதாவது 'வாந்தி' என்று காரணம் சொல்வது 73 சதவிகிதம் மிகவும் நம்பக்கூடிய காரணமாக உள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக வயிற்றுப்போக்கு என்று காரணம் சொல்வது 71 சதவிகிதமும், காய்ச்சல் 68.1 சதவிகிதமும், உடம்பு சரியில்லை என்று காரணம் சொல்வது 53.2 சதவிகிதமும், ஒற்றை தலைவலி 36.5 சதவிகிதமும், மன அழுத்தம் 19 சதவிகிதமும், மனநல ஆரோக்கிய பிரச்சினைகள் 16.9 சதவிகிதமும், சளியாக இருக்கிறது என்று காரணம் சொல்வது 11.4 சதவிகிதமும் நம்பக்கூடிய காரணமாக உள்ளது தெரியவந்துள்ளது.

சரி நம்ம ஊரில் எந்தமாதிரியான காரணங்களை ஏற்றுக்கொள்கிறார்கள்? உங்கள் கருத்தையும் கீழே பதிவு செய்யலாமே

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ