Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாளை மத்திய அரசை எதிர்த்து ரிசர்வ் வங்கி ஊழியர்களின் முதல் போராட்டம்

மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து ரிசர்வ் வங்கி ஊழியர்கள்  நாளை விடுப்பு எடுப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

மத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளைக் குறைப்பது மற்றும் குறுக்கீடு செய்வது ஆகியவற்றை கண்டித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஐக்கிய கூட்டமைப்பு நாளை விடுப்பு எடுப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தன.

அதன்படி நாளை சுமார் 17,000 ரிசர்வ் வங்கி ஊழியர்கள் விடுப்பில் சென்று தங்கள் எதிர்ப்பை வெளியிட முடிவெடுத்துள்ளனர்.

2009ம் ஆண்டிற்கு பிறகு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் முதல் முறையாக போராட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ