Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1,800 கோடி அந்நிய முதலீடுக்கு அரசு கிரீன் சிக்னல்!

ரூபாய் 1,810 கோடி மதிப்பிலான 6 அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் பரிந்துரைகளை ஏற்று முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் ஐஐஎப்எல் ஹோல்டிங்ஸ் லிமிடெட், மான்சூன் கேப்பிடல் எல்எல்சி, ஷேர்கான் லிமிடெட், ஏஜிலி எலக்ட்ரிக் சப்-அசம்பிளி பிரைவேட் லிமிடெட், ஷெராப் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் சீக்வெண்ட் சையன்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்களின் ரூபாய் 1,810.25 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் ஐஐஎப்எல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம்  அதிகமாக முதலீடுகளை குவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP