Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், இண்டிகோவுக்கு 258 கோடி அபராதம்! மத்திய அரசு அதிரடி

ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ ஆகிய 3 விமான நிறுவனங்களுக்கு 258 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் விதத்தில் இந்த மூன்று நிறுவனங்களின் செயல் இருந்ததாக மத்திய வர்த்தகப் போட்டி உறுதி ஆணையம் (சிசிஐ) தெரிவித்துள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களும் எரிபொருள் கூடுதல் வரி நிர்ணய விஷயத்தில் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் பேரில்  258 கோடி ரூபாய் அபராதத்தை மத்திய வர்த்தகப் போட்டி உறுதி ஆணையம் (சிசிஐ) விதித்தள்ளது.

இதில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு 151.69 கோடியும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு 63.74  கோடியும், இண்டிகோ நிறுவனத்துக்கு 42.48  கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ