Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் கனமழை : வீட்டில் இருந்தே பணிபுரிய ஐடி ஊழியர்களுக்கு அறிவுரை

சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக இன்னும் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பாததால் ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுரை வழங்கியுள்ளன.

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதனால் ஐடி ஊழியர்கள் உட்பட பலர் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆகையால் பிரதான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை அல்லது விருப்பப்பட்ட நேரத்தில் அலுவலகத்துக்கு வந்து பணிபுரிய அறிவுரை வழங்கியுள்ளன.

குறிப்பாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் சென்னையில் உள்ள தனது அலுவலகங்களுக்கு வர முடியாத ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ