Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாபா ராம் தேவ்வின் 'பதாஞ்சலி’ நூடுல்ஸ்-க்கு சிக்கல்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  யோகா குரு பாபா ராம் தேவ்வின் ‘பதாஞ்சலி’ நூடுல்ஸ்-க்கு  அனுமதி வழங்கப்படவில்லை என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும்  தர ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) தெரிவித்துள்ளது.

மேகி நூடுல்ஸுக்கு போட்டியாக ‘பதாஞ்சலி’ என்ற பெயரில் புதிய நூடுல்ஸ் ஒன்றை பதாஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரும், யோகா குருவுமான பாபா ராம் தேவ் அறிமுகம் செய்தார்.

நாடு முழுவதும் இந்த 'பதாஞ்சலி’ நூடுல்ஸ் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நூடுல்ஸ் முழுக்க முழுக்க கோதுமையால் தயாரிக்கப்பட்டது. 70 கிராம் நூடுல்ஸின் விலை ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாபா ராம் தேவ் அறிமுகபடுத்திய நூடுல்ஸ் பாக்கெட்டில் எப்எஸ்எஸ்ஏஐ லைசன்ஸ் நம்பர் குறிப்பிடபட்டு உள்ளது.

ஆனால் இது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வழங்க கூடிய லைசன்ஸ் ஆகும். அந்த அமைப்பின் தலைவர் 'பதாஞ்சலி’ நூடுல்ஸ்-க்கு அனுமதி வழங்கவில்லை என கூறியுள்ௐளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ