Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் லாபம் 356.21 கோடி

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிகர லாபமாக 356.21 கோடியை ஈட்டியுள்ளது.

செப்டம்பர் 30ம் தேதி உடன் முடிவடைந்த அரையாண்டில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் ரூ.5914 கோடி ஆக வளர்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் ரூ.5291 கோடிகளுடன் ஒப்பிடுகையில் இது 11.77 சதவிகித வளர்ச்சியாகும்.

மேலும், இந்நிறுவனம் 30 செப்டம்பர் 2015 உடன் முடிவடைந்த அரையாண்டில், வரிக்குப் பிந்தைய லாபமாக  ரூ.356.21 கோடி பதிவு செய்துள்ளதாக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மிலிந்த் கராத் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் முக்கிய வளர்ச்சிக் காரணிகளாக வாகனம் மற்றும் ஆரோக்கியப் பிரிவுகள் முறையே 14 சதவிகிதம் மற்றும் 22 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன் திகழ்வதாக அவர் கூறியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ