Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பறிமுதல் செய்யப்பட்ட பருப்பு வகைகள் ஏலம்

நம் நாட்டில் பதுக்கல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5,366 டன் பருப்பு வகைகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பருப்பு வகைகள் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்துக்கு சென்றபோது சிலர் பருப்பை பதுக்கி வைத்தனர்.  பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பதுக்கல்காரர்களிடம் இருந்து பருப்பு வகைகளை பறிமுதல் செய்தது.

 இதுவரை 1,32,777.14 மில்லியன் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 5,366 டன் பருப்பு வகைகளை சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 இதில் சாட்டிஸ்கர் (1,489.06 டன்), டெல்லி (8.13 டன்), கர்நாடகா (371.03 டன்), ஒடிசா (1,402.16 டன்), மத்திய பிரதேசம் (1,945.8 டன்), ராஜஸ்தான் (150 டன்) விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close