Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்திய அரசின் 3% மானியம் திட்டத்தினால் ஏற்றுமதி அதிகரிக்கும்

இந்தியாவில் ஏற்றுமதி தொழிலை மேலும் வளர்க்க வேண்டி மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு வங்கிக் கடன் வட்டியில் 3 சதவிகிதத்தை மானியமாக வழங்கும் திட்டத்தை மறுபடியும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய ஏற்றுமதி கடந்த 11 மாதங்களாக தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் இந்தியப் பொருளாதாரம் பாதிப்பதால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 17.5 சதவிகிதம் சரிந்து 2,135 கோடி டாலராக குறைந்துள்ளது.


இந்த நிலையில் மத்திய அரசு ஏற்றுமதி கடனுக்கான வட்டியில் 3 சதவிகிதத்தை மானியமாக வழங்கும் திட்டத்தை மீண்டும் அறிவித்துள்ளது.


"மத்திய அரசின் இந்த அறிவிப்பு வரவேற்க வேண்டியது. ஏற்றுமதியாளர்களுக்கு இக்கட்டான நிலை இருந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இதனால் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல், தோல்ப் பொருட்கள் மற்றும் பல துறைகள் வளர்ச்சியடையும்" என்று இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு ஆணையத்தின் (FIEO) மண்டல தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ