Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் விலை மேலும் குறையுமா?

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது மகிழ்ச்சியை அளித்தாலும் அதன் விலை மேலும் குறையுமா என்பதே பெரும்பாலனவர்களின் எதிர்பார்பார்ப்பாக உள்ளது.

தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை அமெரிக்காவில் பெடரல் வங்கியின் நடவடிக்கையைப்  பொறுத்தே அதன் ஏற்றம், இறக்கம் அதிகளவில் காணப்படுகிறது.

பெடரல் வங்கி வட்டியை உயர்த்தும் பட்சத்தில் உலக அளவில் தங்கத்தின் விலை குறையும்.
இப்போது அமெரிக்காவில் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் தங்கத்தில் முதலீடு செய்வது தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்தியாவில், கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 141 ரூபாய் குறைந்துள்ளது, சவரனுக்கு ஆயிரத்து 128 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறைவதற்கு இதுவே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இப்போது அமெரிக்காவில் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதால் அதன் விலை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் 2,563 ரூபாயாக இருக்கிறது.
22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 2,396 ரூபாய்க்கும், ஒரு சவரன் 19,168 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP