Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் பிஸினஸ் வெளியேறியது ரெலீகர்

நம் நாட்டில் நிதி சேவைகள் வழங்கி வரும் ரெலீகர் என்டர்பிரைசஸ் நிறுவனம் தனது மியூச்சுவல் ஃபண்ட் தொழிலில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.

இப்போது ரெலீகர் நிறுவனத்திடம் 51 சதவிகிதமும், இன்வெஸ்கோ நிறுவனத்திடம் 49 சதவிகிதமும் பங்குகள் உள்ளது.

இந்த நிலையில் 51 சதவிகித பங்குகளை இன்வெஸ்கோ நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ரெலீகர் முடிவு செய்துள்ளது.

51 சதவிகித பங்குகள் விற்பனை குறித்து ரெலீகர் நிறுவனம் சரியான காரணங்கள் எதுவும் வெளியிடவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய மியூச்சுவல் ஃபண்ட் தொழில்துறை சீராக வளர்ச்சியடைந்து வரும் நிலையிலும், ரெலீகர் நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ