Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவிகிதம் ஊதிய உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழுவை மத்திய அரசு நியமிக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 7வது ஊதிய பரிந்துரைக் குழுவை நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு, தனது பரிந்துரைகளை இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு பணியாளர்களின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, இதர சலுகைகள் ஆகியவற்றை 22 முதல் 23 சதவிகிதம் வரை உயர்த்துவதற்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அடிப்படை ஊதியத்தில் 15 சதவிகித உயர்வும், பஞ்சப்படி, பயணப்படி உள்ளிட்டவற்றில் 7 முதல் 8 சதவிகித உயர்வும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ