Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவில் பணக்காரர்கள் பட்டியலில் தமிழர்!

அமெரிக்காவில்  40 வயதிற்கு உட்பட்ட பணக்காரர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த விவேக் ராமசாமி  இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவில்  40 வயதிற்கு உட்பட்ட பணக்கார தொழில் முனைவோர் குறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பேர் இடம் பிடித்துள்ளனர்.

பட்டியலில் 500 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதாகும் முன்னாள் ஹெட்ஜ் ஃபண்ட் மேனெஜர் விவேக் ராமசாமி 33வது இடத்தைப் பிடித்துள்ளார்.

400 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இன்ஸ்டாகார்ட் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அபூர்வ மேத்தா 40 வது இடத்தில் உள்ளார்.

பட்டியலில் 47.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்  முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close