Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் பட்டியல்: வேதாந்தா, ஹிண்டால்கோ வெளியேற்றம்

நாணயம் விகடன் 22.11.2015 இதழில் அட்டை படக் கட்டுரையாக 2025-ல் 'சென்செக்ஸ் உள்ளே வெளியே வெளியே' என்பதை தந்திருந்தோம். அதில், 2025 ம் ஆண்டுக்குள் சென்செக்ஸ் பட்டியலில் வேதாந்தா, ஹிண்டால்கோ நிறுவனப் பங்குகள் இருக்காது என்று குறிப்பிட்டிருந்தோம்.
 
இந்தப் பங்குகள் 2015, டிசம்பர் 21 ம் தேதி முதல் சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெறாது என பிஎஸ்இ பங்குச் சந்தை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2025 சென்செக்ஸ் பட்டியலில் ஆசியன் பெயின்ட்ஸ் இடம் பெற்றிருக்கும் என அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அதுவும் இப்போதே நடந்துள்ளது.
 
பிஎஸ்இ சென்செக்ஸ் பட்டியலில் இருந்து சுரங்கத்துறை நிறுவனமான வேதாந்தா, ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்கள் வெளியேறுகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களுக்கு பதிலாக அதானி போர்ட்ஸ் அண்ட் எஸ்இஇசட் மற்றும் ஆசியன் பெயின்ட்ஸ் நிறுவனங்கள் சென்செக்ஸ் பட்டியலில் இணைகின்றன. இந்த மாற்றம் வரும் டிசம்பர் 21ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல பிஎஸ்இ 100 நிறுவனங்களில் பட்டியலில் இருந்து என்ஹெச்பிசி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் யூனிடெக்  நிறுவனங்கள் வெளியேறுகின்றன. இதற்கு பதிலாக பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பார்தி இன்ஃப்ரா டெல் மற்றும் மதர்சன்சுமி சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் பிஎஸ்இ 100 பட்டியலில் இணைகின்றன.
 
அதேபோல பிஎஸ்இ 200 நிறுவனங்களில் பட்டியலில் இருந்து இந்தியன் ஓவர்சீஸ்  பேங்க், ஆந்திரா பேங்க், ஜம்மு அண்ட் காஷ்மீர்  உட்பட 9 நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அதானி என்டரபிரைசஸ், முத்தூட் ஃபைனான்ஸ் போன்ற 9 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் பிஎஸ்இ 500 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து 22 நிறுவனங்கள் வெளியேறுகின்றன. 
 
இதுபோல நீக்கப்பட்டுள்ள மற்றும் சேர்க்கப்பட்டுள்ௐள நிறுவனங்கள் குறித்த விவரங்களுக்கு


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ